திங்கள், 3 ஆகஸ்ட், 2009



ஆரோவில் சாசனம்






1. ஆரோவில் குறிபிட்ட எவருக்கும் சொந்தமானது அல்ல. ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும். ஆனால், ஆரோவில்லில் வசிக்கவேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.
2 .ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம்,மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.
3 .ஆரோவில் சென்ற காலத்திற்கும், வருங்காலத்திற்கும் இடையே ஒரு பாலமாக இருக்க விழைகிறது. புற உலக, அக உலகக் கண்டுபிடுப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி ஆரோவில்லானது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.
4 .ஆரோவில் மனிதகுல ஒருமைப்பாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான உலகியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிக்குரிய நிலையமாக விளங்கும்.





ஸ்ரீ அரவிந்தர் மந்திரம்






ஓம் ஸ்ரீ அரவிந்த மீரா,
என்னுடைய மனத்தை, என்னுடைய இதயத்தை,
என்னுடைய வாழ்க்கையை உமது ஒளிக்கு,
உமது அன்பிற்கு, உமது ஆற்றலுக்குத் திறந்தருளுங்கள்.
எல்லாவற்றிலும் நான் கடவுளைக் காண்பேனாக




மரணத்தை வெல்லுதல்



போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.






அமரகவி சுப்பிரமணிய பாரதியார்

சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட மனிதன்,
தமிழ் மண்ணில் பிறந்த புலி,
கவி பாடுவது இவரது பொழுதுபோக்கு மற்றும் தொழில்,
பசிப் பட்டினி கிடந்த மகாக்கவி,
பெண் விடுதலை வேண்டியவர்,
ஓடி விளையாடு பாப்பா என்று இசை பாடியவர்,
அச்சமில்லை அச்சமில்லை என்று துதி பாடியவர்,
இவர் புதுச்சேரிக்கு வந்து குயில் பட்டு எழுதியவர்,
இவரைப் புகழ்வதற்கு தமிழ் அகராதியில் வார்த்தையே கிடையாது,
இவரே தெய்வத்திரு பாரதி! பாரதி! பாரதி!
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக